Sunday, August 8, 2010

இயக்குனர் பாலச்சந்தர்

தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்து கைலாசம் ஐயர்,காமாட்சி அம்மாள் தம்பதிக்கு 9.7.1930-ல் ஒரு மகன் பிறந்தான்.அந்த மகன் பெரியவனாக வளர வளர அறிவும் வளர்ந்தது.அவர்தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். கல்லூரி படிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்,பிறகு படிப்பு முடிந்த பிறகு முத்துப்பேட்டையில் ஒரு வருடம் ஆசிரியராக பணியாற்றினார்.அப்போது ஜேம்ஸ் வேதநாயகம் என்ற தலைமை ஆசிரியர் பாலச்சந்தருக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
1950-ல் சென்னையில் அக்கௌன்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது .அவருடைய ஏ.ஜி.எஸ்.அலுவலகத்தில் ஒரு விழா நடக்கப்  போகிறது என்பதை தெரிந்து கொண்டு மேலதிகாரியிடம் நாடகம் நடத்த அனுமதிக் கேட்டார்.அனுமதி கிடைத்தது.அந்த நாடகத்தின் பெயர் சினிமா விசிறி